Wednesday, September 22, 2010

காமன்வெல்த் போட்டி உலக ஊடகங்கள் அச்சம்!

புதுடெல்லி, செப். 23
டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி குறித்து சர்வதேச ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து உலக ஊடகங்கள் பதறியபடியே எழுதுகின்றன. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிகுண்டு விபத்தும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த அசம்பாவித நிகழ்வும் குறித்த கேள்வியை சர்வதேச ஊடகங்கள் எழுப்ப காரணங்களாகி விட்டன.
இதுகுறித்து பல்வேறு பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் வருமாறு:
தி கார்டியன்:
'பாலம் இடிந்து விழுந்த நிகழ்வு விளையாட்டை மறைமுகமாக மிரட்டுகிறது' என்று கூறியிருக்கிறது.
தி டெய்லி டெலிகிராப்:
நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகக் கூறியுள்ளது.
தி இண்டிபெண்டண்ட்:
பாலம் இடிந்து விழுந்தது டெல்லி விளையாட்டுப் போட்டி குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
ஏபிசி நியூஸ்:
பாலம் இடிந்து விழுந்தது டெல்லியின் கவலையை கூட்டியுள்ளதாகக் கூறியுள்ளது.
சிட்னி மார்னிங் ஹெரால்ட்:
டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகள் குறித்த அச்சங்கள் அனைத்தையும் தொகுத்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் பாதுகாப்பு குறித்த அச்சங்களை தீர்ப்பதில் டெல்லிக்கே சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளது.

No comments:

Post a Comment