Tuesday, May 4, 2010

டக் வொர்த் லீவிஸ் முறையை மாற்ற வேண்டும்
காலிங்வுட்

இந்த போட்டியில் நாங்கள் எடுத்த 191 ரன்கள் அதிகபட்ச ரன்னாகும். இதன் மூலம் எங்களின் வெற்றி வாய்ப்பு 95 சதவீதம் பிரகாசமாக இருந்தது.
ஆனால் ""டக் வொர்த் லீவிஸ்'' முறையால் தான் நாங்கள் தோல்வியை சந்திக்க நேரிட்டு விட்டது. இது எங்களுக்கு மிகவும் மன வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
டக் வொர்த் லீவிஸ் முறை 50 ஒவர் போட்டிக்கு பொருத்தமாக இருக்கிறது. அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் இது 20 ஓவர் போட்டிக்கு டக் வொர்த் லீவிஸ் முறை சரியானதாக இல்லை
எனவே இந்த விதியை 20 ஓவர் போட்டிக்கு தகுந்த முறையில் மாற்றி அமைத்து புதிய விதிகளை உருவாக்க வேண்டும். இப்போதுள்ள முறை இரு அணிக்கும் சரியான முடிவை தரவில்லை. இந்த விதி ஒரு அணிக்கு சாதகமாகவும் ஒரு அணிக்கு பாதகமாகவும் உள்ளது. இது இப்படியே நீடிப்பது சரியாக இருக்காது.
வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் கெய்ல் கூறும்போது
,
காலிங்வுட் சொல்லும் சில கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவருடைய கருத்தை முழுமையாக ஏற்க முடியாது. டக் வொர்த் லீவிஸ் முறை ஓரளவுக்கு சரியாகவே இருக்கிறது. கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின்போது இதே நிலை எங்கள் அணிக்கும் ஏற்பட்டது. அப்போது 9 ஓவரில் 82 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு நிர்ணயித்து இருந்தனர். அப்போது நாங்கள் வெற்றி பெற்றோம். அதேபோல இப்போதும் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றார்

No comments:

Post a Comment