Tuesday, May 18, 2010

மோடிக்கு எதிராக பிசிசிஐ நிர்வாகிகளின் அவசரக் கூட்டம்

மும்பை, மே.18

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு எதிராக நேற்று மும்பையில் பிசிசிஐ தலைமை நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் லலித் மோடி ஐ.பி.எல் அமைப்பின் தலைவராக இருந்த போது நடைபெற்ற நிதி பரிவர்த்தனை மற்றும் ஐபிஎல் விவகாரம் ,மோடிக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நடந்த இ மெயில் பரிவர்த்தனைகள்,ஏல ஆவணங்கள், அணி நிர்வாகங்களின் ஒப்பந்தங்கள், மீடியா உரிமைகள் குறித்த ஆவணங்கள், உரிமங்கள், ஸ்பான்சர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவைப்பற்றிய
மோடியின் விளக்கம் ஆகியவை குறித்த ஆலோசனை நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விளக்கத்தை லலித் மோடி சமர்ப்பித்த 48 மணி நேரங்களில் இக்கூட்டம் நடைபெறுவதால், இக்கூட்டம் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ மற்றும் ஐஎம்ஜி நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், பிசிசிஐ தலைவர் சசன்க் மனோகர் மற்றும் செயலாளர் சீனிவாசன், ஐஎம்ஜி துணை தலைவர் ஆன்ட்ரிவ் ஒயிட்பிளட் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment