Wednesday, May 12, 2010

சூப்பர்8 சுற்றில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது நியூசிலாந்து

பிரிட்ஜ்டவுன், மே 8
டி20 உலக கோப்பை போட்டி சூப்பர்8 சுற்றில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதிக் கொண்ட ஆட்டம் பார்படோசில் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்தது தென் ஆப்பிரிக்கா அணி .
மந்தமான ஆட்டம்
தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கல்லீசும், கேப்டன் ஸ்மித்தும் களம் இறங்கினார்கள். மந்தமாக ஆடிய ஸ்மித் 14 ரன்களில் சோதியின் பந்து வீச்சில் வீழ்ந்தார். ஐ.பி.எல்லில் கலக்கிய கல்லிஸ் இப்போட்டியிலும் 2 சிக்சர்களை விளாசினார்.கல்லிஸ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த கிப்ஸ் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
மோர்கல் அதிரடி
தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல்லும் ,டிவில்லியர்ஸ்ஸும் இணைந்து தென் ஆப்பிரிக்காவின் ரன் விகிதத்தினை உயர்த்தினர். மோர்கல்40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். இவர் நியுஸிலாந்து வீரர் சோதி வீசிய ஆட்டத்தின் 19 வது ஒவரில் 3 அபார சிக்சர்களை வீசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடில்லாமல் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப் புக்கு 170 ரன்கள் எடுத்தது. டிவில்லியர்ஸ் 47 ரன்களுடன் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது நியுஸிலாந்து. 40 ரன்களுக்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது நியுஸிலாந்து அணி.நியுஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மெக்குல்லம் 6 ரன்னிலும், ரைடர் 33 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களமிறங்கிய குப்தில் 18 ரன்னும், டெய்லர் 19 ரன்னும் எடுத்து வெளியேறினார்கள். அதற்கு அடுத்து வந்த நியுஸிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 18 பந்தில் 40 ரன் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் மோர்கல் தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment