Tuesday, May 4, 2010

டக் வொர்த் லீவிஸ் விதியால் வெற்றியை இழந்த இங்கிலாந்து

கயானா ,மே. 5
20 ஒவர் உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டிஸுடன் மோதிய இங்கிலாந்து அணி டக் வொர்த் லீவிஸ் காரணமாக தோல்வியை எதிர்கொண்டது.
மேற்கு இந்திய தீவுகளில்நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று முன்தினம் டி பிரிவில் நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி வீரர் மோர்கன் அதிகபட்சமாக 35 பந்துகளில் 55 ரன்களும், ரைட் 25 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி விளையாடி முடிந்ததும் மழை குறுக்கிட்டதன் விளைவாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பிறகு விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 5.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது . கடந்த 20 ஓவர் உலககோப்பை போட்டியில் இதே நிலைமைக்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது.அப்போது ""இ'' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்த இரு அணிகளும் ஒவல் மைதானத்தில் ஆடிய ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டிஸ் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இருந்தது.
அடுத்து வெஸட் இண்டீஸ் ஆடியபோது மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் 9 ஓவரில் 80 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதனை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் 8.2 ஓவரிலேயே 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment