Tuesday, May 18, 2010

இரவு நேர பார்ட்டிகள் என்னை பாதிக்கவில்லை சோபர்ஸ்


பார்படாஸ், மே 18

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் கேரி சோபர்ஸ் இரவு நேர மதுபான பார்ட்டிகள் என்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை எப்போதும் பாதித்ததில்லை என்று கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் 35 ஆண்டுகால சாதனையை கடந்த சனிக்கிழமையன்று (15.05.2010) கொண்டாடினார். உலக கோப்பை போட்டியில் தோற்பதற்கு ஐ.பி.எல் பார்ட்டி தான் காரணம் என்ற தோனியின் கருத்து கூறியது முதற்கொண்டு பல்வேறு கண்டனக் குரல் வந்த வண்ணம் இருந்தது. இந்த கருத்து குறித்து சோபர்ஸிடம் கேட்ட போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு முதல் நாள் இரவு நான் பல பார்ட்டிகளில் பங்கேற்றாலும் அது என் கிரிக்கெட் ஆட்டத்திறனை பாதிக்காமல் பார்த்துக்கொண்டேன். இதனை உறுதி செய்யும் விதமாக ஆடுகளத்தில் இறங்கி பலமுறை சதம் அடித்து என் ஆட்டத்திறனை உறுதி செய்துள்ளேன். இந்த முறையானது எல்லா வீரர்களுக்கும் பொருந்தாது. அது அவரவர்களின் உடல் திறனைப் பொறுத்தது. எத்தகைய சூழலையும் தாங்கிக் கொள்ளும் தன்மை என் உடலில் இயற்கையாகவே இருந்ததால் இரவு பார்ட்டிகள் என்னை பாதித்ததில்லை. இதற்காக ஆட்டத்திற்கு முதல்நாள் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது சிறந்தது என்று சொல்லமாட்டேன். வீரர்களின் உடல் நிலையைப் பொறுத்து இரவு பார்ட்டிகளில் பங்கேற்பதும்,பங்கேற்காமலிருப்பதும். பார்ட்டிகளில் கலந்து கொண்ட நாட்களில் துங்கினால் அடுத்த நாள் சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதால் பெரும்பாலான நேரங்களில் நான் தூங்கமாட்டேன்.வெற்றி இலக்கை எட்டும் வரை எனக்கு ஓய்வு என்பதே இல்லை. இதனால் என்னைப் பொறுத்தவரை இரவு நேர கட்டுப்பாடு என்பது தேவையில்லாத ஒன்று என கூறினார்.

No comments:

Post a Comment