Wednesday, May 12, 2010

பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் ,பேட்ஸ்மேன்கள் தான்....டோனி

கயானா,மே.11
இந்தியா மேற்கு இந்திய தீவுகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா அணியின் பலமே ""பேட்டிங்'' தான் 170 ரன் எடுக்க முடியாத இலக்கு இல்லை. ஆனால் எங்களது பேட்டிங் மோசமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் சரியாக ஆட வில்லை. நீண்ட பேட்டிங் வரிசை இருந்தும் இந்த இலக்கை எடுக்க முடியாமல் போனது ஏமாற்றமே.
சிறப்பான பந்துவீச்சு
பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர்.
எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினார்கள்.
பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் எங்களது சுழற்பந்து வீச்சுக்கு திணறினார்கள். குறிப்பாக ஹர்பஜன்சிங் சிறப்பாக வீசி நெருக்கடி கொடுத்தார். மற்ற அணிகளுடன் எங்களை ஒப்பிடுகையில் பந்துவீச்சு வரிசை வித்தியாசமானது தான்.
ஐ.பி.எல். காரணமல்ல
ஒய்வில்லாமல் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியது தான் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்ட முடியாது. ஐ.பி.எல். போட்டிக்கும், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கும் இடைவெளி சற்று குறைவுதான். ஓய்வு இல்லாமல் ஆடுவது ஒரு பெரிய விஷயம் இல்லை. அதனுடன் ஒப்பிடுவது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
டோனியின் சொதப்பல் முடிவு
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் ""டாஸ்'' வென்ற டோனி முதலில் பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செய்த அதே தவறை மீண்டும் செய்தார்.டோனி தொடர்ந்து தவறான முடிவை எடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மேலும் அணியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. கூடுதலாக ஒரு வேகப்பந்து வீரரை தேர்வு செய்து இருக்கலாம். வினய்குமாருக்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 2 ஓவரில் 36 ரன்களை வாரி கொடுத்தார். இதனால் அவரை நீக்கி விட்டு வினய்குமாருக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டோனி அவ்வாறு செய்யாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஜடேஜாவின் செயல்பாடு நேற்று மோசமாக இருந்தது. ""பீல்டிங்'' பவுலிங், பேட்டிங்கில் சொதப்பினார். சந்திராபால் அடித்த பந்தை ""கேட்ச்'' பிடிக்க தவறினார். 2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

அதிசயம் நிகழ்ந்தால் மட்டும் அரையிறுதியில்
இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது. தொடரில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் தான் உள்ளது.இருந்தாலும் கடைசி வாய்ப்பாக இலங்கையுடனான ஆட்டத்தில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் அதோடு மட்டுமில்லாமல் வெஸ்ட் இண்டிஸ் அணி ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்க வேண்டும்.

No comments:

Post a Comment