Wednesday, May 12, 2010

இந்திய குடிமகளாகவே இருப்பேன் சானியா மிர்ஸா

ஐதராபாத், மே7
பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நான் எப்போதும் இந்திய பெண்ணாகவே இருப்பேன். ஒருபோதும் பாகிஸ்தான் குடியுரிமை பெற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்.12ஆம் தேதி இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே துபாயில் திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பிறகு பாகிஸ்தான் சென்றிருந்த சானியா தற்போது இந்தியா வந்துள்ளார்.
அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது; திருமணம் வாழ்க்கை என்னை எந்தவிதத்திலும் மாற்றிவிடவில்லை. மாலிக்கோடு நான் சேர்ந்து வாழ்வதை தவிர மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்.
மாலிக்கை எனக்கு கடந்த 6 வருடங்களாக தெரியும். 2004 ஆம் ஆண்டு மாலிக்கை முதலில் சந்தித்தேன். அதன் பிறகு தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்திருக்கிறோம். அப்போதெல்லாம் எங்களின் பேச்சில் திருமணம் பற்றிய எந்தவித திட்டமிடலும் இல்லாமல் இருந்தது.ஆனால் நாளாக நாளாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தோம்.எங்களின் உள்ளுணர்வு சொன்னதை கேட்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தோம்.
பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், நான் எப்போதுமே இந்தியர் தான். ஒருபோதும் பாகிஸ்தான் குடியுரிமை பெற முயற்சிக்க மாட்டேன். துபாயில் அடிக்கடி தங்கும் பழக்கத்தை மாலிக்கொண்டிருப்பதால் எங்கள் இல்வாழ்க்கையை துபாயில் துவங்க முடிவு செய்துள்ளோம்.மேலும்
சோயிப் மாலிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பார்த்ததே இல்லை என்று அந்த போட்டியில் கூறியுள்ள சானியா, எதிர் வரவுள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment