Wednesday, May 12, 2010

டி20 உலக கோப்பை அரையிறுதில் ஆஸ்திரேலியா

பார்படாஸ்,மே.11
தற்போதைக்கு ஆஸி அணிதான் யாராலும் வெல்ல முடியாத அணியாகத் தெரிகிறது. நன்றாக ஆடிவரும் இலங்கை அணியை சர்வ சாதாரணமாக அது தோற்கடித்தது.
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் இலங்கை படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்ட்ரலியா அரையறுதிக்கு சென்றது.
'எப்' பிரிவில் நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ட்ரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் ஒயிட் 49 பந்துகளில் 85 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 81 ரன் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்சான் 12 பந்துகளில் 20 ரன் எடுத்தார்.

No comments:

Post a Comment