
லண்டன், ஜூலை. 2
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6ம் நிலை வீரரான சோடர் லிங்கை (சுவீடன்) எதிர் கொண்டார்.
இதில் நடால் 36, 63, 76, (74), 61 என்ற செட் கணக்கில் வென்றார்.
நடால் அரை இறுதியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேயுடன் மோதுகிறார்.
முர்ரே கால் இறுதியில் 67 (57), 76 (75), 62, 62 என்ற கணக்கில் டிசோங்காவை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.
மற்றொரு அரை இறுதியில் டிஜோகோவிக் (செர்பியா) தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) மோதுகிறார்கள். தாமஸ் கால் இறுதியில் 6 முறை சாம்பியனான பெடரரை தோற்கடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment