Saturday, July 3, 2010

வரிகட்டாமல் ஏய்க்கும் கிரிக்கெட் வாரியம்

புதுடெல்லி, ஜூலை. 3
கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டிய வரிகளில் நேரடி வரி விதிப்பு மத்திய வாரியம் சில விலக்குகளை அளித்து இருந்தது. அதில் இருந்து சில வற்றை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது.
அதன்படி தற்போது கிரிக்கெட் வாரியம் ரூ.684 கோடி வரிபாக்கி வைத்து உள்ளது. இதை கண்டிப்பாக செலுத்த வேண்டிய நிலை கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது.
200708 ஆண்டின்படி ரூ.118 கோடியும், 200809 ஆண்டின்படி ரூ.421 கோடியும், 200910 ஆண்டின்படி ரூ.145 கோடியும் ஆக மொத்தம் ரூ.684 கோடி வரி செலுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.பி.எல்.லில் வரி ஏய்ப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறை கேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. பெரிய அளவில் வருமானவரி ஏய்ப்பு நடந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இப்போது ரூ.64 கோடி அளவுக்கு சேவை வரி ஏய்ப்பு நடந்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அணி உரிமையாளர்கள் தாங்கள் பெற்ற வருமானத் தின் அடிப்படையில் மத்திய அரசுக்கு சேவைவரி செலுத்த வேண்டும். அதில் ரூ.64 கோடியை கட்ட வில்லை.
இது தொடர்பாக 32 தடவை அணி உரிமையாளர் களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment