Saturday, July 3, 2010

காமன்வெல்த் போட்டி பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம்

டெல்லி,ஜுலை.3
தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் போது லஸ்கர் இ தயீபா பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தலாமென்று அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபார் கூறியுள்ளது.
ஸ்ட்ராட்ஃபார் அமைப்பின் உளவுத் தகவல்கள் பகுப்பாய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஸ்காட் ஸ்டூவர்ட், பிப்ரவரி 13ஆம் தேதி பூனே நகரில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய அல் கய்டா பயங்கரவாதியான இலியாஸ் காஷ்மீரி, காமன்வெல்த் போட்டிகளின் போது குண்டு வைக்க திட்டமுள்ளது என்று கூறியுள்ளார்.
காஷ்மீரில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறும்வரை இப்படிப்பட்டத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று ஆசிய டைம்ஸ் இணையத்தின் வாயிலாக காஷ்மீரி விடுத்த எச்சரிக்கையையும் ஸ்ட்ராட்ஃபார் சுட்டிக்காட்டியுள்ளது.பெனால்டி ஷூட் அவுட்

No comments:

Post a Comment