
ஜோகன்னஸ்பர்க், ஜுலை.4
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுப் போட்டியில் கானா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது உருகுவே அணி.
உலக கோப்பை கால்பந்து
தென்னாப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. உருகுவே, கானா அணிகள் மோதின.ஜோகன்னஸ்பர்க் சாக்கர்சிட்டி மைதானத்தில் நடந்தஇரண்டாவது காலிறுதி போட்டியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கானா அணியுடன் தென்அமெரிக்க அணியான உருகுவே அணி மோதியது.
வாய்ப்புகளை வீணடித்தனர்
போட்டி துவங்கியது முதல் இரு அணியினரும் முன்னிலை பெற போராடினர். ஆட்டத்தின் 20 நிமிடம் வரை உருகுவே அணியே ஆதிக்கம் செலுத்தியது.முதல் 20 நிமிடத்தில் உருகுவே அணியின் கோல் வாய்ப்பை கானா கோல் கீப்பர் தடுத்தார்.
உருகுவே அணிக்கு அடுத்தடுத்து கார்னர் கிக் வாய்ப்புகள்கிடைத்தது .இருப்பினும் அந்த அணியினர் வாய்ப்புகளை வீணடித்தனர்.
இதேபோல்29 ,31 வது நிமிடத்தில் கானா அணிக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் இதை வோர்ஷா, ஜியான் ஆகியோர் கோல் போஸ்ட்டுக்கு வெளியே அடித்து ஏமாற்றினர்.ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கானாவின் முன்ட்டாரி, கோல் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார்.
முன்னிலை
இப்படி தொடர்ந்து நடத்திய தாக்குதலுக்கு பலனாக முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில்(47வது நிமிடம்) ஸ்டாப்பேஜ் நேரத்தில் கானா அணி கோல் அடித்து உருகுவே அணிக்கு அதிர்ச்சி அளித்தது.35 மீட்டர் தூரத்தில் இருந்து முன்டாரி கோலை அடித்தார். இந்த உலக கோப்பையில் முதல்முறையாக சல்லி முன்டாரி இந்த ஆட்டத்தில்தான் களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் பாதியில் கானா அணி 10 என முன்னிலை பெற்றது.
சமநிலை
கோல்வாங்கிய பின்னிலை வகித்த உருகுவே அணி இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் பலனாக அந்த அணிக்கு 55வது நிமிடத்தில் "பிரிகிக்' வாய்ப்பு கிடைத்தது. அணியின் கேப்டன் போர்லான் ப்ரீகிக்கை பயன்படுத்தி கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க, இது அசத்தலான கோலாக மாறியது. உலக கோப்பை போட்டியில் சிறந்த கோல்களில் இதுவும் ஒன்றாகும். பார்லேன் இந்தப் போட்டித் தொடரில் அடிக்கும் 3வது கோலாகும் இது.இதையடுத்து ஸ்கோர் 11 என சமனானது.உருகுவே அணிக்கு மேலும் நல்வாய்ப்பாக 63வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு வாய்ப்பை அந்த அணியின் சுவாரெஜ் வீணாக்கினார். இறுதியில் இரு அணியினரும் மேலும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் 11 என போட்டி சமனானது. கூடுதல் நேரம்
இதனால் வெற்றிதோல்வியை நிர்ணயம் செய்ய கூடுதல் நேரம் கடை பிடிக்கப்பட்டது.
முதல் பாதியில் இருஅணியினரும் கோல் அடிக்கவில்லை. இருப்பினும் கானா அணியினர் தொடர்ந்து, உருகுவே கோல் பகுதிக்குள் அடுத்தடுத்து தாக்குல் நடத்தினர்.
போட்டியின் "ஸ்டாப்பேஜ்' (122 வது நிமிடம்), கானா அணியினர் அடித்த பந்தை, கோல் லைனில் வைத்து கையால் தடுத்து, உருகுவே அணிக்கு வில்லனாக மாறினார் முன்னணி வீரர் சுவாரெஜ்.கோல் விழுவதை தடுத்த அவரது இந்த செயலால் நடுவர் கடும் நடவடிக்கை எடுத்தார். சிவப்பு அட்டை காண்பித்து சுவாரெஜ் ஆடுகளத்தை விட்டு வெளியேற்றினார்.
அத்தோடு ""பெனால்டி'' வாய்ப்பும் கானாவுக்கு கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி கானா 21 என்ற கோல் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த அணியின் முன்னணி வீரர் ஜியான் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டார். அவர் கோல் கம்பத்தில் பந்தை அடித்து கோல் வாய்ப்பை வீணடித்தார்.கூடுதல் நேரத்திலும் ஸ்கோர் 11 என சமமாக இருந்தது.
பெனால்டி ஷூட் அவுட்
இதையடுத்து "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது.
முதல் வாய்ப்பில் உருகுவே வீரர் பார்லேனும், கானா வீரர் ஜியானும் கோல் அடித்தனர்.
இரண்டாவது வாய்ப்பில் உருகுவே வீரர் விக்டோரினோ,கானா வீரர் அப்பியா என இருவரும் கோல் அடிக்க ஸ்கோர் 22 என சமநிலை எட்டியது. 3வது வாய்ப்பில் உருகுவே வீரர் ஸ்காட்டி கோல் அடித்தது. கானா கேப்டன் ஜான்பென்சன் அடித்த பந்தை உருகுவே கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லேரா அருமையாக தடுத்தார். இதனால் உருகுவே 32 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது.
நான்காவது வாய்ப்பை உருகுவேயின் பேராரா, கோல் போஸ்ட்டுக்கு மேலாக அடித்து ஏமாற்றினார். மீண்டும் ஸ்கோரை சமன் செய்ய கானாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கானாவின் அடியாவும் கோல் கீப்பரிடம் அடித்து கோட்டைவிட, கானாவின் தோல்வி உறுதியானது.
5வது வாய்ப்பில் உருகுவே வீரர் செபாஸ்டியன் கோல் அடித்தார். தந்திரமாக செயல்பட்ட உருகுவேயின் அப்ரியூ பந்தை மெதுவாக கோல் போஸ்ட்டை நோக்கி அடித்து, கோலாக மாற்றினார். (42) இதையடுத்து "பெனால்டி ஷூட் அவுட்' முறையில், 53 என வென்ற உருகுவே அணி, ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. உருகுவே அணி அரையிறுதியில் நெதர்லாந்துடன் வருகிற 6ந்தேதி மோதுகிறது. முன்னதாக நடந்த காலிறுதியில் நெதர்லாந்து 21 என்ற கோல் கணக்கில் பிரேசிலை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.
No comments:
Post a Comment