
சண்டிகர்,ஜுலை.4
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா டி.எஸ்.பி.,யாக பணிபுரிய அரியானா மாநில அரசு, வாய்ப்பு அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்த இந்திய கிராண்ட் பிரிக்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவல். "ஹாட்ரிக்' பட்டம் வென்ற இவருக்கு பரிசுகளும், பாராட்டும் குவிந்தவண்ணம் உள்ள நிலையில் அரியா மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹோடா, சாய்னா நேவல் அம்மாநிலத்தில் நேரடியாக "டி.எஸ்.பி.,'யாக பணிபுரிய வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் சாய்னாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் : தன்னுடைய ஆட்டத்தின் மூலம் சர்வதேச பாட்மின்டன் அரங்கில் அசுர வளர்ச்சி கண்டு வரும் சாய்னாவுக்கு வாழ்த்துகள். மேலும் சாதனைகள் பல படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவரது செயல்பாடு, வளரும் இளைஞர்களுக்கு சிறந்த பாடமாக அமையும் என நம்புகிறேன். இவர் அரியானா மாநிலத்தின் காவல் துறையில் நேரடியாக "டி.எஸ்.பி.,'யாக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment