Saturday, July 3, 2010

கோவா கால்பந்து அணிக்கு பயிற்சியாளர் நியமனம்
ஜோகனஸ்பர்க், ஜுலை.4 சிங்கப்பூர் இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து அணிகளில் ஒன்றான சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வின்சென்ட் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவாவின் புகழ்பெற்ற கால்பந்து அணிகளில் ஒன்றான சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு பிரேசிலை சேர்ந்த கார்லெஸ் பெரைரா பயிற்சியாளராக இருந்து வந்தார். தற்போது இவர் நீக்கப்பட்டு சிங்கப்பூர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வின்சென்ட் சுப்பிரமணியம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சர்ச்சில் பிரதர்ஸ் தலைவர் அலீமோ பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
பெங்களுரை சேர்ந்த வின்சென்ட் சுப்பிரமணியம் 1978 முதல் 1986ம் ஆண்டு வரை சிங்கப்பூர் ஜுனியர் அணிக்கும் 1998 முதல் 2000ம் ஆண்டு வரை சிங்கப்பூர் தேசிய அணிக்கும் பயிற்சியாளராக இருந்தவர்.199495ம் ஆண்டுகளில் ஜிலாங்க் இன்டர்நேசனல் அணிக்கும் 199697ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆயுதப்படை அணிக்கும் பயிற்சியாளராக இருந்த அனுபவம் வின்சென்ட் சுப்பிரமணியத்துக்கு உண்டு.

No comments:

Post a Comment