Saturday, July 3, 2010

பிரேசில் தோல்வியை ஏற்கமுடியாமல் துங்கா ராஜினாமா


ஜோகனஸ்பர்க், ஜுலை.4

பிரேசில் அணி உலக கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு தகுதி பெறததால் அந்த அணியின் பயிற்சியாளர் தன்னுடைய பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ட்எலிசபெத்தில் நடந்த முதலாவது காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனான பிரேசிலும், 4ம்நிலை அணியான ஆலந்தும் மோதின.இந்த போட்டியில் பிரேசில் 21 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் பயிற்சியாளர் துங்கா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.துங்கா கடந்த 1994ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தோல்வி குறித்து துங்கா கூறியதாவது: வெற்றிக்காக மட்டுமே இங்கு வந்தோம். தோல்வி குறித்து எண்ணிப் பார்க்கவில்லை. கடந்த நான்கு வருடங்களாக தோல்வியை நாங்கள் நெருங்க விடவில்லை. ஆனால் இந்த ஒரு போட்டி எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக மனவலியை கொடுத்து விட்டது.முதல் பாதியில் சிறப்பாக விளையாடிவிட்டு பிற்பாதியில் கோட்டை விட்டுவிட்டோம். உலக கோப்பை போட்டியில் 10 வீரர்களுடன் விளையாடி வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம்.அதற்காக பிலிப் மெலோவை குறை சொல்லவில்லை. கால்பந்தில் இதுவெல்லம் சகஜம். நான்கு வருடங்கள் திறமைமிகுந்த வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தோல்வியுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment