லண்டன்,ஜுலை.3
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறியது இங்கிலாந்து அணி.இங்கிலாந்து வீரர்களின் மோசமான ஆட்டத்தினால் ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கள் கேர்ள் பிரண்ட்ஸ்களுடன் கூலாக ஊர் சுற்றி வருகிறார்கள். லாம்பர்ட் தனது கேர்ள் பிரண்ட் கிறிஸ்டின் பிலிக்ளியை அழைத்துக் கொண்டு, இத்தாலியில் உள்ள சர்தினியா தீவுக்கு உல்லாச சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கோல் கீப்பர் ரோப் கிரீன் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல ஏற்பாடு செய்து வருகிறார். ரூனி தனது மனைவி, மகனுடன், பார்படாசில் கட்டியுள்ள சொகுசு பங்களாவுக்கு சென்றுள்ளார்.
இந்தச் செய்தி அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அணி தோற்ற கடுப்பில் இருக்கும் இங்கிலாந்து ரசிகர்கள் இந்த செய்திகள் ,படங்களை பார்த்து கொந்தளித்து போயிருக்கின்றனர்.
காதலிகளுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு செலவிடும் பணத்தை இங்கிலாந்து வீரர்கள் தென்னாப்ரிக்காவில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கொடுத்திருந்தால் ரசிகர்களின் கோபம் குறைந்திருக்கும் என பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருக்கின்றன.
No comments:
Post a Comment