Saturday, July 3, 2010

காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனிதான் ஜெயிக்கும் ஆக்டோபஸ்



பெர்லின், ஜூலை. 3
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் இன்று ஜெர்மனிஅர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.இதில் ஜெர்மனி அணி ஜெயிக்குமென ஆக்டோபஸ் கூறியுள்ளது. பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் உள்ள ஆக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக சொல்லி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
கானா மற்றும் ஆஸி.க்கு எதிராக ஜெர்மனிதான் வெற்றி பெறும் என சரியாகச் சொன்னது .அதேபோல் செர்பியா அணியுடன் ஜெர்மனி மோதிய போது, செர்பியாதான் ஜெயிக்கும் என்றது ஆக்டோபஸ் .அது கூறியது போல் செர்பியா வென்றது , ஜெர்மனி தோற்றது. ஜெர்மனியும் இங்கிலாந்தும் மோதிய நாக்அவுட் போட்டியில் ஜெர்மனிதான் ஜெயிக்கும் என்றது ஆக்டோபஸ். சொல்லி வைத்தது போல் ஜெர்மனி 4 கோல் அடித்து இங்கிலாந்தை தோற்கடித்தது.
பெர்லினில் உள்ள மிகப்பெரிய நீர் தொட்டியில் பால் ஆக்டோபஸ் அடைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள் ஆக்டோபஸுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது. ஆக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ, அந்த அணிதான் வெற்றி பெறுகிறது.இதே முறையில் தான் ஜெர்மனி நாட்டுக் கொடி இருந்த பெட்டிக்கு சென்று அர்ஜென்டினாவுடனான ஆட்டத்தில் ஜெர்மனி ஜெயிக்கும் என்று ஆக்டோபஸ் கூறியுள்ளது.ஆக்டோபஸ் சொன்னதுபோல் மும்பையை சேர்ந்த எண் கணித நிபுனர் சஞ்சய் ஜீமானி இந்த முறை உலக கோப்பையை ஜெர்மனி தான் கைப்பற்றும் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment