Saturday, July 3, 2010

மெக்சிகோ பயிற்சியாளர் ராஜினாமா

ஜொகன்னஸ்பர்க்,ஜுலை.3
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரவுண்ட் 16 சுற்றுப் போட்டியில் மெக்சிகோ அணி தோல்வியடைந்தது தொடரிலிருந்து வெளியேறியது. நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜாவியர் அகுர்ரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து கூறும்போது:
காலிறுதிக்கு தகுதி பெற்று உலகின் சிறந்த 8 அணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. எனவே தோல்விக்கு பொறுப்பேற்று விலகுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment