Saturday, July 3, 2010

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அசாரூதின்


ஐதராபாத், ஜூலை.3
ஐதராபாத் பேட்மிண்டன் வீராங்கனையுடன் சுற்றி அசாருதீன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஐதராபாத் பேட்மிண்டன் வீராங்கனை ஜாவ்லா குத்தாவுடன் அசாருதீன் சுற்றுவதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன.
26 வயதாகும் ஜாவ்லா ஏற்கனவே திருமணம் ஆனவர் , பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் உலகில் 7வது வரிசையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் ரோட்டில் உள்ள அசாருதீன் வீடும், ஜாவ்லா வீடும் அருகருகே தான் உள்ளது.
டெல்லியில் நடந்த ஆசிய பேட்மிண்டன் போட்டியில் ஜாவ்லாவும்,அசாருதீனும் சேர்ந்து காணப்பட்டார். ஜாவ்லா பயிற்சி பெறும் போது அங்கும் அசாருதீன் இருந்தார்.
சமீபத்தில் அசாருதீன் ஐதராபாத்தில் நடந்த ஏ பிரிவு லீக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு ஜாவ்லாவும் காணப்பட்டார்.இப்படியாக இவர்களின் நட்புக்கு பரிசாக அசாருதீன் ஜாவ்லாவுக்கு விலை உயர்ந்த ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜாவ்லா தோழிகள் கூறும் போது, ஜாவ்லாவே சொந்தமாக சம்பாதித்து இந்த காரை வாங்கி இருப்பதாக தெரிவித்தனர். ஜாவ்லா பயிற்சி செய்தபோது அசாருதீன் வந்தது தற்செயலாக நடந்தது என்றும் அவர்கள் கூறினார்கள்.ஆனால் இருவரையும் பற்றிய விவகாரம் இப்போது புகைச்சலாக கிளம்பி உள்ளது. ஒரு வேளை இது சர்ச்சையை உருவாக்க வாய்ப்பு உள்ளது.இதுபற்றி ஜாவ்லா கணவர் சேத்தனிடம் கேட்டபோது, இது நல்லதா? கெட்டதா? என்று தெரிய வில்லை. ஆனால் நானும் என் மனைவியும் இப்போது வரை ஒன்றாகத்தான் வாழ்கிறோம் என்றார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். அவர் 2 முறை திருமணம் ஆனவர். முதலில் நஸ்ரீன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் 2 மகன்கள் உள்ளனர். அவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை சங்கீதா பிஜ்லானியை திருமணம் செய்து கொண்டார் எனபது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment